செய்திகள்

திருப்பூரில் ஓடும் பஸ்சில் பயணியிடம் திருட்டு

Published On 2018-06-21 16:36 IST   |   Update On 2018-06-21 16:36:00 IST
திருப்பூரில் ஓடும் பஸ்சில் பயணியிடம் திருடிய பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

திருப்பூர்:

திருப்பூரை அடுத்த மங்கலத்தை சேர்ந்தவர் சாஜிதா (வயது 45). இவர் திருப்பூருக்கு பஸ்சில் வந்தார். திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே பஸ் வந்தபோது, சாஜிதா வைத்திருந்த கைப்பையில் இருந்த பணம் மற்றும் செல்போனை உடன் பயணம் செய்த பெண் ஒருவர் ஜேப்படி செய்து விட்டு இறங்கி தப்பி ஓடினார். 

இதை கவனித்த சாஜிதா சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து அந்த பெண்ணை மடக்கி பிடித்தனர். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த மாரி (29) என்பது தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ரூ.200 மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News