செய்திகள்

உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்: தி.மு.க. கோரிக்கை

Published On 2018-06-17 17:27 GMT   |   Update On 2018-06-17 17:27 GMT
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.

புதுச்சேரி:

புதுவை தெற்கு மாநிலம், நெல்லித்தோப்பு தொகுதி தி.மு.க. நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகிராமன் முன்னிலை வகித்தார். தொகுதி செயலாளர் நடராஜன் வரவேற்று பேசினார்.

இதில், தலைமை செயற்குழு உறுப்பினர் தைரியநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் வேலவன், சிறுபான்மை அணி அமைப்பாளர் அகஸ்டின் சித்து, தொ.மு.ச. தலைவர் அண்ணா அடைக்கலம், நிர்வாகிகள் செல்வம், ரங்கநாதன், கண்ணன், முருகேசன், பக்கிரி, பானுகணேசன், காந்தி, கலியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

* தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லித்தோப்பு தொகுதியில் பொதுக்கூட்டம் நடத்தி 500 ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது.

*மாநிலத்தில் முதியோர், கணவரால் கைவிடப்பட்டோர், முதிர்க்கன்னிகள் மற்றும் விதவைகள் தகுதியானவர்கள் சுமார் 30 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்து கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு விரைவாக உதவித்தொகை கிடைத்திட முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* உச்சநீதிமன்ற உத்தரவுப்படி விரைவில் புதுவையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* நெல்லித்தோப்பு வ. சுப்பையா சிலையில் இருந்து மீன் மார்க்கெட் வரை உள்ள சாலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக மக்கள் தினந்தோறும் அவதிக்குள்ளாகிறார்கள். மேற்கண்ட சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்த வேண்டும்.

இவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News