செய்திகள்

ஒட்டன்சத்திரம் பகுதியில் வரத்து அதிகரிப்பால் மாங்காய் விலை வீழ்ச்சி

Published On 2018-06-17 16:21 GMT   |   Update On 2018-06-17 16:21 GMT
ஒட்டன்சத்திரம் பகுதியில் மாங்காய் வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள அம்பிளிக்கை, விருப்பாட்சி, கள்ளி மந்தையம், இடையகோட்டை மற்றும் வடகாடு மலைப்பகுதிகள் ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் கல்லாமை, நீலா, செந்தூரம் உள்ளிட்ட பல்வேறு மா ரக மரங்களை நடவு செய்துள்ளனர்.

மா சீசன் மே மாதம் தொடங்கி ஜூலை வரை இருக்கும். இந்தாண்டு கோடை மழை ஓரளவு பெய்ததால் மா விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ கல்லாமை ரக மாங்காய் ரூ.6-க்கும், செந்தூரம் ரக மாங்காய் ரூ.10-க்கும் மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது.

இங்கிருந்து கேரளா, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு தினமும் ஏராளமான டன் மாங்காய் ரகங்கள் அனுப்பப்படுகிறது.

Tags:    

Similar News