செய்திகள்

தேர்தல் செலவு வழக்கு தள்ளுபடி - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published On 2018-06-14 13:53 IST   |   Update On 2018-06-14 13:53:00 IST
அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் ரத்துக்கு காரணமான அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களிடம் தேர்தல் செலவு பணத்தை வசூலிக்க வேண்டும் என்ற வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை :

தமிழக சட்டசபை தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் அந்த தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது.

தேர்தல் ரத்துக்கு காரணமான அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளின் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களிடம் தேர்தல் செலவுக்கான பணத்தை வசூலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, வேட்பாளர்களிடம் பணம் வசூலிக்க சட்டத்தில் இடமில்லை என கூறி, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

மேலும், இது தொடர்பாக சட்டத்திருத்தம் செய்வது தொடர்பாக அரசுக்கு  தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்யலாம் எனவும் நீதிபதி கூறினார்.
Tags:    

Similar News