செய்திகள்

ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையத்தில் ஜார்ஜ் மீண்டும் ஆஜர்

Published On 2018-06-14 07:36 GMT   |   Update On 2018-06-14 07:36 GMT
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் மீண்டும் இன்று ஆஜரானார். அவரிடம் வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்தினார்கள். #jayalalithadeath #excommissionerGeorge

சென்னை:

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனராக ஜார்ஜ் பணியில் இருந்தார்.

இதனால் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் நடந்தது குறித்து அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது என்ற அடிப்படையில் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. அதனை தொடர்ந்து நீதிபதி ஆறுமுகசாமி முன்பு ஜார்ஜ் நேற்று ஆஜரானார்.


2 மணி நேரம் அவரிடம் விசாரணை நடைப்பெற்றது. ஜெயலலிதா சிகிச்சை மற்றும் மரணம் குறித்த கேள்விகள் அவரிடம் எழுப்பப்பட்டன. வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்த வேண்டியிருந்ததால் இன்று மீண்டும் அவரை ஆஜராகும்படி விசாரணை ஆணையம் உத்தரவிட்டது.

அதே போல ஜெயலலிதாவிற்கு அளித்த சிகிச்சை குறித்து திவாகரனின் மகள் டாக்டர் ராஜமாதங்கி, மருமகன் டாக்டர் விக்ரம் ஆகியோரும் இன்று ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் இன்று மீண்டும் ஆஜரானார். அவரிடம் வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்தினார்கள். வக்கீல்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

திவாகரனின் மகள், மருமகன் ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் சிகிச்சை குறித்த கேள்விகளை நீதிபதி ஆறுமுகசாமி கேட்டார். #jayalalithadeath #excommissionerGeorge

Tags:    

Similar News