செய்திகள்

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்

Published On 2018-06-09 22:47 IST   |   Update On 2018-06-09 22:47:00 IST
பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரை:

பழைய பென்சன் திட் டத்தை அமல்படுத்த வேண்டும், நிலுவையில் உள்ள பணப்பலன்களை முன்தேதியிட்டு வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் மதுரை பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடத் தினர்.

தமிழ்நாடு பட்டதாரிகள் ஆசிரியர் கழக மாவட்ட செயலாளரும், ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப் பாளருமான முருகன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் செல்லப் பாண்டியன், தமிழக தமி ழாசிரியர் கழக மாவட்ட தலைவர் செல்வராஜ், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் 350-க் கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அரசே, அரசே பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்து என்று கோ‌ஷம் எழுப்பினர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News