கணவர் நடத்தையில் சந்தேகப்பட்டதால் மனைவி தீக்குளித்து தற்கொலை
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கற்பகநாதர் குளம் பகுதியை சேர்ந்தவர் உத்தராபதி. இவரது மனைவி கலைராணி (வயது 37).
உத்தராபதி மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டதால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் பக்கிரிசாமி என்பவர் மகள் சடங்கு நிகழ்ச்சிக்கு உத்தராபதியும், கலைராணியும் சென்றனர். அப்போது அவர்களுகிடையே மீண்டு வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனமுடைந்த கலைராணி தங்களது வீட்டுக்கு சென்று தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகிய அவரை திருவாரூர் அரசு ஆஸ்பத்தியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி கலைராணியின் உறவினர் அண்ணாதுரை முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.