செய்திகள்

கோவை மாநகரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 9 பேர் அதிரடி இடமாற்றம்

Published On 2018-06-06 16:22 IST   |   Update On 2018-06-06 16:22:00 IST
கோவை மாநகர போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 9 பேரை அதிரடியாக இட மாற்றம் செய்து மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா இன்று உத்தரவிட்டுள்ளார்.
கோவை:

கோவை மாநகர போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 9 பேரை அதிரடியாக இட மாற்றம் செய்து மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா இன்று உத்தரவிட்டுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:-

கோவை மாநகர போக்குவரத்து புலனாய்வு கிழக்குபிரிவு இன்ஸ்பெக்டர் இருந்த விஜயகுமாரி அனைத்து மகளிர் காவல் நிலையம் மத்திய பிரிவுக்கும், போக்குவரத்து புலளாய்வு மேற்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்தி காட்டூர் குற்றபிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

அனைத்து மகளிர் போலீஸ் மேற்கு பிரிவு இன்ஸ்பெக்டர் வீரம்மாள் போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவுக்கும், அனைத்து மகளிர் போலீஸ் மத்திய பிரிவில் பணியாற்றி வரும் ஷீலா கோவை மாநகர குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டர் கீதா போக்குவரத்து புலனாய்வு மேற்கு பிரிவுக்கும், காட்டூர் குற்றப்பிரிவு ரூபி அனைத்து மகளிர் போலீஸ் மேற்கு பிரிவுக்கும், செல்வபுரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பரணிதரன் சரவணம் பட்டி குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முத்துமணி செல்வபுரம் குற்றப்பிரிவுக்கும், அமுதா குனியமுத்தூர் குற்றப்பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். #Tamilnews
Tags:    

Similar News