செய்திகள்

வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் பெண் போலீஸ் பலி

Published On 2018-06-03 15:43 GMT   |   Update On 2018-06-03 15:43 GMT
வில்லியனூர் அருகே இன்று காலை மோட்டார் சைக்கிள் மோதியதில் பெண் போலீஸ்காரர் பரிதாபமாக இறந்து போனார்.

புதுச்சேரி:

திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகள் பூங்குழலி. (வயது 24). இவர் ரெட்டியார் பாளையம் போலீஸ் நிலையத்தில் பெண் போலீஸ் காரராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இன்று காலை 7 மணிக்கு வழக்கம் போல் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் பணிக்கு புறப்பட்டு வந்தார். ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார்.

வில்லியனூர் அருகே பிள்ளையார் குப்பத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில் நிறுத்தி ஹெல் மெட்டை கழற்றி வைத்து விட்டு மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பினார்.

பின்னர் அங்கிருந்து ரோட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி ஹெல்மெட் அணிய முயன்றபோது, அந்த வழியாக அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பூங்குழலி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில், தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்த பூங்குழலியை அக்கம் பக்கத்தினர் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பூங்குழலி பரிதாபமாக இறந்து போனார்.

இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பூங்குழலி மீது மோதி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றவரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News