செய்திகள்

பிளஸ்-1 தேர்வு முடிவுகள்: திண்டுக்கல் மாவட்டத்தில் 91.72 சதவீதம் தேர்ச்சி

Published On 2018-05-30 10:52 GMT   |   Update On 2018-05-30 10:52 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த முடிந்த பிளஸ்-1 தேர்வில் 91.72 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். #PlusoneResult
திண்டுக்கல்:

தமிழகத்தில் முதல் முறையாக இந்த வருடம் பிளஸ்-1 வகுப்புக்கு அரசு தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் 22 ஆயிரத்து 199 மாணவ-மாணவிகள் இத்தேர்வை எழுதினர்.

இதில் 20 ஆயிரத்து 362 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 84.01 சதவீதமும், மாணவிகள் 95.61 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 91.72 சதவீதம் ஆகும். தேர்வு முடிவுகள் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவலாக அனுப்பப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு வராமலேயே தேர்வு முடிவுகளை அறிந்து கொண்டனர்.

தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகள் தொடர்ந்து பிளஸ்-2 வகுப்பில் பயிலலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு வருவதற்குள் தோல்வியடைந்த பாடங்களில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 72 அரசு பள்ளிகளில் இருந்து 8 ஆயிரத்து 370 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 7 ஆயிரத்து 71 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது 84.48 சதவீதம் ஆகும். #PlusoneResult
Tags:    

Similar News