செய்திகள்

தனுஷ்கோடியில் 3-வது நாளாக கடல் சீற்றம் - சுற்றுலா பயணிகளுக்கு தடை

Published On 2018-05-30 04:15 GMT   |   Update On 2018-05-30 04:15 GMT
தனுஷ்கோடியில் 3-வது நாளாக இன்று கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம்:

மியான்மருக்கு 170 கி.மீட் டர் மேற்கு தென்மேற்கு கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் ராமேசுவரம் பகுதியிலும், புயலால் அழிந்து போன தனுஷ்கோடி பகுதியிலும் கடந்த 2 நாட்களாக பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. கடலும் கொந்தளிப்பாக காணப்படுகிறது.

எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் அரசு பஸ்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற் கரைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கம்பிப்பாடு பகுதியை தாண்டி அரிச்சல்முனை பகுதிக்கு சாலை வழியாக வாகனங்கள் செல்லாமல் இருப்பதற்காக போலீசார் தடுப்பு கம்பிகளை அமைத்துள்ளனர்.

இன்று 3-வது நாளாக ராமேசுவரம், தனுஷ் கோடியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. ராட்சத அலைகள் எழும்புகின்றன. எனவே சுற்றுலா பயணிகள் அரிச்சல்முனை கடற்கரைக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

Tags:    

Similar News