செய்திகள்

காந்திபுரம் 100 அடி ரோடு மேம்பாலத்தில் வடமாநில தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

Published On 2018-05-28 10:42 GMT   |   Update On 2018-05-28 10:42 GMT
காந்திபுரம் 100 அடி ரோடு மேம்பாலத்தில் வடமாநில தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை 100 அடி ரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் வட மாநில தொழிலாளர்கள் உள்பட ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜேந்திர சிங் (வயது 42) என்பவர் பாலம் கட்டும் பணியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இன்று காலை 5 மணியளவில் ராஜேந்திர சிங் சக தொழிலாளிகளிடம் பாலத்துக்கு தண்ணீர் அடிக்க செல்வதாக கூறி விட்டு சென்றார்.

பாலத்தின் நடுவே சென்ற அவர் அங்குள்ள கம்பியில் கயிற்றை கட்டு அதனை தனது கழுத்தில் மாட்டி குதித்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பாலத்தின் நடுவே வாலிபர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து பாலத்தின் நடுவில் தூக்கு கயிற்றில் பிணமாக தொங்கிய ராஜேந்திர சிங்கின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திர சிங் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News