செய்திகள்

எருமபட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி: அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா தொடங்கி வைத்தனர்

Published On 2018-05-26 15:12 GMT   |   Update On 2018-05-26 15:12 GMT
எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியினை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியினை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 330 காளைகளும், 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். வீரர்கள் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்க முயன்றனர். மாடுபிடி வீரர்களின் பிடிக்கு சிக்காமல் காளைகள் துள்ளி குதித்து ஓடியதை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு கட்டில், டைனிங் டேபிள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன. 

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசோதனைகளுக்கு பிறகே காளைகள் அனுமதிக்கப்பட்டன. விழாவில் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், எம்.பி. சுந்தரம், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், சேந்தமங்கலம் எம்.எல்.ஏ சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழா குழு தலைவர் செந்தில் பூபதி, கௌரவத் தலைவர் சுப்பு, மெடிக்கல் பாலு ஆகியோர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News