செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 3 பஸ்கள் கல்வீசி உடைப்பு

Published On 2018-05-26 06:28 GMT   |   Update On 2018-05-26 06:28 GMT
நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 3 பஸ்கள் கல்வீசி கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #Thoothukudifiring
நெல்லை:

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நெல்லை மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 3 பஸ்கள் கல்வீசி கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு நேற்று இரவு ஒரு பஸ் புறப்பட்டு வந்தது. இந்த பஸ் நெல்லையை அடுத்த சிவந்திபட்டி அருகே விட்டிலாபுரம் பகுதியில் வந்தபோது அங்கு மறைந்துநின்ற மர்ம நபர்கள் திடீரென பஸ்சை நோக்கி கல்வீசினர்.

இதில் பஸ் கண்ணாடி உடைந்து சேதமானது. இதுபற்றி சிவந்திபட்டி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதேபோல நாசரேத்தில் இருந்து நெல்லைக்கு நேற்று இரவு ஒரு தனியார் பஸ் சென்றது. பஸ் சிவந்திபட்டி அருகே சென்றபோது அந்த பஸ் மீதும் மர்ம கும்பல் கல்வீசியது.

இதில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. இந்த இரு சம்பவங்கள் குறித்தும் சிவந்திபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தென்காசியில் இருந்து பாவூர்சத்திரம் வழியாக வீ.கே.புதூருக்கு நேற்று இரவு ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது.

பஸ் மேலமெஞ்ஞானபுரம் அருகே வந்தபோது அங்கு மறைந்து நின்ற மர்ம நபர்கள் பஸ்சை நோக்கி கல்வீசினர். இந்த சம்பவத்தில் பஸ் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.

இதுபற்றி குற்றாலம் போலீசில் புகார் செய்யப்ப‌ட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Thoothukudifiring
Tags:    

Similar News