செய்திகள்

9-வது நாளாக விலை உயர்வு - சென்னையில் உச்சத்தை தொட்டது பெட்ரோல் விலை

Published On 2018-05-22 04:30 GMT   |   Update On 2018-05-22 04:30 GMT
பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை உச்சத்தை தொட்டுள்ளது. #petrol #diesel
சென்னை:

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்பு சுமார் 20 நாட்கள் வரை பெட்ரோல் - டீசல் விலை உயராமல் இருந்தது. தேர்தலின் போது பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அது மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதி எண்ணெய் நிறுவனங்கள் விலை உயர்வை நிறுத்தி வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில், கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 12-ந்தேதி முடிந்தபிறகு அடுத்த 2 நாட்களில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் உயர்த்தி வருகின்றன.

அவ்வகையில் 9-வது நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் வரலாற்றிலேயே பெட்ரோல், டீசல் விலை உயர்வு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை 32 காசுகள் உயர்ந்து ரூ 79.79 என நிர்ணயக்கப்பட்டுள்ளது. டீசல் விலை 28 காசுகள் உயர்ந்து ரூ 71.87 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் டெல்லியிலும் பெட்ரோல் விலை உச்சத்தை எட்டியது. ஒரு லிட்டர் பெட்ரோல் 76.57 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் ரூ.76.87, கொல்கத்தாவில் ரூ.79.53 என்ற நிலையில் பெட்ரோல் விலை உள்ளது. #petrol #diesel
Tags:    

Similar News