செய்திகள்

காவிரி மேலாண்மை வாரிய செயல் அலுவலகத்தை கர்நாடகத்தில் அமைக்கக் கூடாது- வேல்முருகன்

Published On 2018-05-16 09:15 GMT   |   Update On 2018-05-16 09:15 GMT
காவிரி மேலாண்மை வாரிய செயல் அலுவலகத்தை கர்நாடகத்தில் அமைக்கக் கூடாது என்று தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். #CauveryIssue #cauverymanagementboard #Velmurugan
நெய்வேலி:

தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் இன்று நெய்வேலியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு பல்வேறு காரணங்களை காட்டி காலம் தாழ்த்தி வருகிறது.

இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் மத்திய அரசுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதில் நாளை (17-ந் தேதி) மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான அமைப்பை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. இதை வரவேற்கிறோம்.

தமிழக அரசு தங்களது நியாயமான காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தில் பெறுவதற்கு அழுத்தம் தர வேண்டும். காலதாமதம் செய்யக்கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் கொண்ட செயல் அலுவலகத்தை கர்நாடகாவில் அமைக்கக்கூடாது.

இதனால் கர்நாடகத்தில் வசிக்கும் தமிழக மக்கள் பெரிதும் பாதிப்படைவார்கள். தமிழக அரசு உறுதியாக இருந்து உச்ச நீதிமன்றத்தில் வாதிட வேண்டும். இந்த ஆணையம் அரசியலமைப்புக்கு மாறாக அதிகாரம் பெற்ற ஆணையமாக இருக்க வேண்டும்.

தமிழக அரசு எக்காரணத்தை கொண்டும் மத்திய அரசுக்கு இணங்கி செயல்படக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார். #CauveryIssue #cauverymanagementboard #Velmurugan
Tags:    

Similar News