செய்திகள்

தமிழ்நாட்டில் அநேக இடங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை அதிகாரி தகவல்

Published On 2018-05-16 00:22 IST   |   Update On 2018-05-16 00:22:00 IST
தமிழகத்தில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார்.
சென்னை:

தமிழகத்தில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:-

கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உருவானதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இன்று(புதன்கிழமை) இடியுடன் கூடிய மழை பெய்யும். தென் மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும்.

காஞ்சீபுரம், திருவள்ளூர், சேலம், மதுரை, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் வெயில் 100.4 முதல் 104 டிகிரி வரை இருக்கும்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

திருச்செங்கோடு 7 செ.மீ., தொண்டி, மணமேல்குடி தலா 5 செ.மீ., தேவகோட்டை 4 செ.மீ., கூடலூர் பஜார், பவானி, பட்டுக்கோட்டை, ஓட்டப்பிடாரம் தலா 3 செ.மீ., குமாரபாளையம், காரைக்குடி, தேனி மாவட்டம் கூடலூர், சூளகிரி, ஸ்ரீவில்லிபுத்தூர், உத்தமபாளையம், பெண்ணாகரம், தாளவாடி, பவானிசாகர், போடிநாயக்கனூர் தலா 2 செ.மீ., அன்னூர், பெரியகுளம், சேலம், வேடசந்தூர், ராதாபுரம், பெருந்துறை, கொடுமுடி, ஒகேனக்கல், ராஜபாளையம், பாப்பிரெட்டிப்பட்டி, ஏற்காடு, ஈரோடு, பாண்டவராயர்தலை தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. 
Tags:    

Similar News