செய்திகள்

சிவகிரியில் கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி

Published On 2018-05-14 14:47 IST   |   Update On 2018-05-14 14:50:00 IST
சிவகிரியில் கிணற்றில் தவறி விழுந்து பெண் பலியானார். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிவகிரி:

சிவகிரி அருகே உள்ள ராமநாதபுரத்தை சேர்ந்தவர் கோதண்டன். இவரது மனைவி முத்தம்மாள். இவர் மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த சிலருடன் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி அருகில் இருந்த ஒரு கிணற்றில் விழுந்தார்.

அங்கிருந்தவர்கள் இதுகுறித்து சிவகிரி போலீசார் மற்றும் வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நிலைய வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து முத்தம்மாளை பிணமாக மீட்டனர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News