செய்திகள்
மணல் கொள்ளையை தடுத்த வருவாய் ஆய்வாளரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி
மாமல்லபுரத்தில் மணல் கடத்தலை தடுத்த வருவாய் ஆய்வாளரை லாரி ஏற்றி கொல்ல முயற்ன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாமல்லபுரம்:
கூவத்தூரை அடுத்த கீலார்கொள்ளை பாலாற்றில் மணல் கொள்ளை நடப்பதாக வருவாய் ஆய்வாளர் சீனிவாசனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை 3 மணியளவில் சீனிவாசன் தனது பைக்கில் சக ஊழியர்களுடன் பாலாற்று பகுதிக்கு சென்றார். அப்மணல் ஏற்றி வந்த லாரியை அவர்கள் மறித்தனர்.
ஆனால் லாரியை டிரைவர் நிறுத்தாமல் மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் அதிர்ஷ்டவசமாக சீனிவாசன் உயிர்தப்பினார்.
இதையடுத்து அவர் அதிகாரிளுடன் மணல் லாரியை மடக்கி பிடித்து லாரி டிரைவர் முகையூர் தண்டபாணி என்பவரை கைது செய்தார். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கூவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.