செய்திகள்

பல்லாவரத்தில் தே.மு.தி.க. பிரமுகர் வீட்டில் மோட்டார்சைக்கிள்கள் தீ வைத்து எரிப்பு

Published On 2018-05-09 14:49 IST   |   Update On 2018-05-09 14:49:00 IST
பல்லாவரத்தில் தே.மு.தி.க. பிரமுகர் வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள்கள் திடீரென எரிந்ததால், மர்மநபர்கள் தீ வைத்தார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:

பல்லாவரம் கவுல் பஜார் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி. பரங்கிமலை ஒன்றிய தே.மு.தி.க. பொருளாளராக உள்ளார். நேற்று நள்ளிரவு இவரது வீட்டு முன்பு இருந்த 4 மோட்டார்சைக்கிள்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

உடனே முனுசாமி மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர். ஆனாலும் 4 மோட்டார்சைக்கிள்களும் தீயில் கருகி நாசமானது. மோட்டார்சைக்கிளுக்கு மர்ம கும்பல் தீவைத்ததாக தெரிகிறது.

கடந்த ஆண்டும் முனுசாமி வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது.

இதுகுறித்து முனுசாமி சங்கர்நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? அல்லது தானாக தீபிடித்து எரிந்ததா? என்று விசாரித்து வருகிறார்கள்.

Similar News