செய்திகள்

கடந்த நிதி ஆண்டில் தமிழகத்தில் 194 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

Published On 2018-05-03 23:00 GMT   |   Update On 2018-05-03 23:00 GMT
சென்னை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த நிதி ஆண்டில் ரூ.57 கோடியே 53 லட்சம் மதிப்பிலான 194 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை:

சென்னை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த நிதி ஆண்டில் ரூ.57 கோடியே 53 லட்சம் மதிப்பிலான 194 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். குறிப்பாக இலங்கையில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுவது தெரிய வந்தது. அதன்படி, திருச்செந்தூர், ராமேசுவரம், வேதாரண்யம் ஆகிய கடலோர பகுதிகளுக்கு இலங்கையில் இருந்து நாட்டுப்படகுகள் மற்றும் சிறிய அளவிலான மீன்பிடி படகுகளில் தங்கம் கடத்தி வருவது கண்டறியப்பட்டது.

கடந்த நிதி ஆண்டில் இலங்கையில் இருந்து 3 வெவ்வேறு சம்பவங்களில் கடல்மார்க்கமாக கடத்தி கொண்டு வரப்பட்டபோது மட்டும் 32.24 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

தங்க கடத்தலை தடுப்பதற்காக இந்தியா மற்றும் இலங்கை அதிகாரிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற்றது. அப்போது தங்கம் கடத்தி கொண்டுவரப்படுவதை தடுக்க நிர்வாகரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டது. அதன்பேரில் இலங்கை சுங்கத்துறை மற்றும் கடற்படையும் கடத்தலை தடுக்க கூடுதல் படைகளை களத்தில் இறக்கியது.

மேலும் கடத்தல் சம்பவங்களை ஒழிக்கும் நடவடிக்கையாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக இலங்கை அரசு கடந்த மாதம் உயர்த்தியது. 
Tags:    

Similar News