செய்திகள்

புதுவையில் சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் 117 பேர் கைது

Published On 2018-05-02 12:05 GMT   |   Update On 2018-05-02 12:05 GMT
புதுவையில் தனியார் படகு துறை அமைப்பதை தடுத்து நிறுத்த கோரி சட்டசபையை முற்றுகையிட முயன்றதால் சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் 117 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி:

தனியார் படகு துறை அமைப்பதை அரசு தடுத்து நிறுத்த கோரி சுற்றுலா வளர்ச்சி கழக ஊழிய்ர்கள் கடந்த 25-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று 8-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் உப்பளத்தில் உள்ள தலைமை அலுவலகம் முன்பு இருந்து சட்டசபை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.

ஊர்வலத்துக்கு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் கலைவானன் தலைமை தாங்கினார். ஊர்வலம் மி‌ஷன் வீதி வழியாக வந்த போது போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதனையடுத்து போலீசார் சுற்றுலா கழக ஊழியர்களை கைது செய்தனர். 16 பெண்கள் உள்பட 117 பேர் கைது செய்யப்பட்டனர்.
Tags:    

Similar News