செய்திகள்

தென்னிந்திய செய்தி சேனல்கள் துல்லியமான செய்தியை வழங்கி வருகின்றன - பன்வாரிலால் புரோஹித்

Published On 2018-04-27 11:49 IST   |   Update On 2018-04-27 11:49:00 IST
சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய ஊடகங்கள் தொடர்பான கருத்தரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு பேசினார். #BanwarilalPurohit #TNgovernor
சென்னை:

தென்னிந்திய ஊடகங்கள் தொடர்பான கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

சூரியனை சில சமயங்களில் மேகங்கள் மறைக்கலாம். ஆனால் நிரந்தரமாக மறைத்துவிட முடியாது. அதுபோல தான் உண்மையும். உண்மை கண்டிப்பாக வெற்றி பெரும். மேலும், தென்னிந்திய ஊடகங்கள் சிறப்பான பணியை செய்து வருகின்றன. தென்னிந்திய செய்தி சேனல்கள் துல்லியமான செய்தியை வழங்கி வருகின்றன.

இவ்வாறு பன்வாரிலால் புரோஹித் பேசினார். #BanwarilalPurohit #TNgovernor

Similar News