செய்திகள்
மோட்டார் சைக்கிள் விபத்தில் போலீஸ்காரர் பலி
அச்சிறுபாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் போலீஸ்காரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுராந்தகம்:
அச்சிறுபாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது50). மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணி புரிந்து வந்தார்.
இவர் கடந்த 20-ந்தேதி அதிகாலை அச்சிறுபாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சீனிவாசன் பலத்த காயம் அடைந்தார்.
அவரை மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து இருந்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக இறந்தார்.