செய்திகள்

பாரதிய ஜனதா ஆட்சியில் சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை- நாராயணசாமி

Published On 2018-04-24 15:06 IST   |   Update On 2018-04-24 15:06:00 IST
பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களான குறிப்பாக உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை என நாராயணசாமி தெரிவித்துள்ளார். #BJP #Narayanasamy
ஆலந்தூர்:

புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜனதா ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, தலித் சமுதாய மக்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்ந்து நடந்து வருகிறது.

பா.ஜனதா ஆளும் மாநிலங்களான குறிப்பாக உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை.

ஏப் 2-ந்தேதி நடந்த போராட்டத்தில் திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த 16 பேர் கொல்லப்பட்டனர். இது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை. பா.ஜனதா ஆட்சியில் ஒட்டு மொத்த பொதுமக்களுக்கே பாதுகாப்பு இல்லை.


தென் மாநிலங்களில் இருந்து நிதி எடுத்து வட மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு செலவழிப்பது சரியல்ல. மாநில உரிமைகளை பறிக்கும் செயல்களில் பா.ஜனதா அரசு ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக கல்வி, மருத்துவம், தண்ணீர் ஆகிய வி‌ஷயங்களை கையில் எடுத்து உள்ளது.

மாநில அரசுகளை ‘டம்மி’ யாக்குவதற்கு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தென் மாநில உரிமைகளை பறிக்க கூடாது என்பதற்காக மத்திய அரசை எதிர்த்து அனைத்து முதல்-அமைச்சர்கள் மாநாடு நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News