செய்திகள்

தாம்பரம் அருகே ரவுடி கடத்தி கொலை- போலீசார் விசாரணை

Published On 2018-04-23 15:12 IST   |   Update On 2018-04-23 15:12:00 IST
தாம்பரம் அருகே ரவுடி கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:

சென்னை கொருக்குபேட்டையை சேர்ந்தவர் ஸ்டாலின் (35).பிரபல ரவுடி.

இவர் மீது தாம்பரம், மண்ணிவாக்கம் சோமங்கலம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இவர் போலீசாரால் தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் தாம்பரம் முடிச்சூர் பாலம் கீழே ரவுடி ஸ்டாலின் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது தலை, கழுத்து, கை என உடல் முழுவதும் வெட்டுக் காயங்கள் இருந்தன.

அதை பார்த்த பொது மக்கள் சோமங்கலம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று ஸ்டாலின் உடலை கைப்பற்றினார்கள். அவரை கொலை செய்தது யார் என தெரியவில்லை.

ஸ்டாலின் சொந்த ஊர் கொருக்குபேட்டை. ஆனால் அவர் முடிச்சூர் பாலத்தின் அடியில் பிணமாக கிடந்தார். எனவே முன்விரோதம் காரணமாக அவரை யாராவது கடத்திச் சென்று கொலை செய்து உடலை பாலத்தின் அடியில் வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

அவரது கொலையில் எத்தனை பேருக்கு தொடர்பு உள்ளது? பெண் பிரச்சனையில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது பணத்தகராறில் கொலை நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. கொலையாளிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக உள்ளனர்.

Similar News