மாமல்லபுரம் அருகே என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் கடலில் மூழ்கி பலி
மாமல்லபுரம்:
காஞ்சீபுரம் சங்கரா பல்கலைக் கழகத்தில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர்கள் தேவசந்தர் (வயது 19), துளிபாலா பார்கவ் (19).
நேற்று மதியம் தேவசந்தர், துளிபாலா பார்கவ் உள்பட 17 மாணவர்கள் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தனர். அனைவரும் கடற்கரை கோவில் அருகே கடலில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது தேவசந்தர், துளிபாலா பார்கவ் ஆகிய 2 பேரையும் ராட்சதஅலை கடலுக்குள் இழுத்து சென்றது. நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
சிறிது நேரத்தில் அதே பகுதியில் தேவசந்தர் உடல் கரை ஒதுங்கியது. மாயமான துளிபாலா பார்கவை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை மாமல்லபுரத்தை அடுத்த தேவநேரி கடற்கரையில் துளிபாலா பார்கவ் பிணம் கரை ஒதுங்கியது.
மாமல்லபுரம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியானவர் தேவசந்தர் காஞ்சீபுரத்தை சேர்ந்தவர். துளிபாலா பார்கவின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் ஆகும். #tamilnews