செய்திகள்
நீலாங்கரையில் தவறான சிகிச்சையால் பெண் மரணம்
நீலாங்கரையில் தவறான சிகிச்சையால் பெண் மரணம் அடைந்தார் என்று கூறி ஆஸ்பத்திரி மீது கணவர் புகார் தெரிவித்துள்ளார்.
சோழிங்கநல்லூர்:
நீலாங்கரையில் உள்ள நீலாங்கரை குப்பத்தை சேர்ந்தவர் ராஜா. பெயிண்டராக இருக்கிறார். இவரது மனைவி சற்குணம் (32). கடந்த 2 நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார்.
எனவே அவரை அருகேயுள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் சிறுநீரக கோளாறு காரணமாக உடல் நலக்குறைவு எற்பட்டுள்ளது. ஆபரேஷன் செய்தால் குணமாகும் என தெரிவித்தார்.
உடனே ஆபரேசனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் சற்குணம் திடீரென இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அவரது கணவர் ராஜா மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து நீலாங்கரை போலீசில் சற்குணத்தின் கணவர் ராஜா புகார் செய்தார். அதில், டாக்டர்களின் தவறான சிகிச்சையால் தனது மனைவி இறந்துவிட்டதாக தெரிவத்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.