செய்திகள்

எதிர்க்கட்சிகளை கைது செய்தது அடக்குமுறை- கமல்ஹாசன்

Published On 2018-04-05 13:43 IST   |   Update On 2018-04-05 14:40:00 IST
மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட எதிர் கட்சியினர் கைது செய்யப்பட்டது அடக்குமுறை என்று கமல்ஹாசன் தெரிவித்தார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
ஆலந்தூர்:

மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் திருச்சியில் இருந்து சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கமல் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை தேசிய ஊடகங்கள் வெளிப்படுத்தவில்லை. அவர்கள் அப்படித்தான் செய்வார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.

அந்த போராட்டம் வன்முறையாக மாறக் கூடாது. அது என்னுடைய எண்ணம். போராட்டத்தை அடக்க முயற்சி செய்தால் வன்முறையாக மாற வாய்ப்புள்ளது. வன்முறையாக மாறாமல் இருப்பது இருதரப்பினரின் கடமையே. எதிர் கட்சியினர் கைது செய்யப்பட்டது அடக்குமுறையாகும்.

இவ்வாறு அவர் கூறினார். #MakkalNeedhiMaiam #Tamilnews

Similar News