செய்திகள்

பா.ஜ.க.வுக்கு உதவ ஓவர் டைம் வேலை பார்க்கும் தமிழக அரசு - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Published On 2018-03-30 05:56 GMT   |   Update On 2018-03-30 05:56 GMT
கர்நாடக தேர்தலில் பா.ஜ.க.வுக்கு உதவ ஓவர் டைம் ஆக உழைப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வரும் நிலையில், தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:-

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய, மாநில அரசுகள் தமிழகத்திற்கு துரோகம் இழைத்துள்ளன. உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறிய மத்திய அரசுக்கு எதிராக, தமிழக அமைச்சரவையை கூட்டி கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.



கர்நாடக தேர்தலில் பா.ஜ.க.வுக்கு உதவ "ஓவர் டைம்" ஆக உழைப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பேசியபோதே, அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தால், தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைந்திருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Tags:    

Similar News