செய்திகள்

கடலூர் பஸ் நிலையத்தில் இரவு நேர துப்புரவு பணி- கலெக்டர் தண்டபாணி தொடங்கி வைத்தார்

Published On 2018-03-29 18:10 IST   |   Update On 2018-03-29 18:10:00 IST
கடலூர் பெருநகராட்சி சார்பில் இரவு நேர துப்புரவு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இந்த பணிகளை பஸ் நிலையத்தில் மாவட்ட கலெக்டர் தண்டபாணி தொடங்கி வைத்தார்.
கடலூர்:

கடலூர் பெருநகராட்சி சார்பில் இரவு நேர துப்புரவு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இந்த பணிகளை பஸ் நிலையத்தில் மாவட்ட கலெக்டர் தண்டபாணி தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் சரவணன் தலைமை தாங்கினார்.

கடலூர் திருப்பாதிரிபுலியூர் பூக்கடை வீதி, லாரன்ஸ் ரோடு, வணிக வளாக பகுதிகளில் துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதுபோன்ற இரவு பணிகள் தொடர்ச்சியாக அனைத்து பிரதான சாலைகளிலும் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் வணிக நிறுவனங்கள் அனைத்தும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளுக்கான இரு வகையான குப்பைத்தொட்டிகள் வைத்து அதில் தாங்களாகவே தங்கள் குப்பைகளை போட்டுச்செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கடலூர் பெருநகராட்சி ஆணையர் சரவணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன், நகர் நல அலுவலர் டாக்டர் எழில்மதனா, நகர அமைப்பு அலுவலர் அன்பு, நகராட்சி மேலாளர் பழனி, உதவி பொறியாளர் தங்கதுரை, இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன், நகர அமைப்பு ஆய்வாளர் தங்கமணி, வருவாய் அலுவலர் முத்துசெல்வம் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், 60-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். #tamilnews

Similar News