செய்திகள்

ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்

Published On 2018-03-29 16:56 IST   |   Update On 2018-03-29 17:28:00 IST
இஸ்ரோ தயாரித்துள்ள தொலைத்தொடர்புக்கு உதவும் ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. #ISRO #GSAT6A #GSLVF08
சென்னை:

இஸ்ரோ தயாரித்துள்ள தொலைத்தொடர்புக்கு உதவும்  ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி. எஃப் 08 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது.

இஸ்ரோ தயாரித்துள்ள தொலைத் தொடர்புக்கு உதவும் ஜிசாட் 6ஏ செயற்கைக்கோளை இஸ்ரோ நிறுவனம் தயாரித்துள்ளது. இதனை, ஜி.எஸ்.எல்.வி. எஃப் 08 ராக்கெட் மூலம் ஏவுவதற்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டின.

ஜிசாட் 6ஏ செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி. எஃப் 08 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் ஏவுவதற்கான 27 மணிநேர கவுன்ட் டவுன் நேற்று தொடங்கியது.


ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 4.56 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. வெற்றிக்கரமாக விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. #ISRO #GSAT6A #GSLVF08 #Tamilnews

Similar News