செய்திகள்

நாகை விவசாயிகள் மரத்தில் தூக்குமாட்டி நூதன போராட்டம்

Published On 2018-03-29 16:42 IST   |   Update On 2018-03-29 16:42:00 IST
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நாகை விவசாயிகள் மரத்தில் தூக்குமாட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். #CauveryIssue #CauveryManagementBoard
நாகை:

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மத்திய அரசு அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கர்நாடக தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு செயல்படுவதாகவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தயங்குவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நாகை புதிய பேருந்து நிலையம் அருகே விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மரத்தில் தூக்குமாட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 6 விவசாயிகளை கைது செய்தனர். #CauveryIssue #CauveryManagementBoard

Similar News