செய்திகள்

நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி கிரகலட்சுமி வீட்டில் 170 பவுன் கொள்ளை

Published On 2018-03-28 15:55 IST   |   Update On 2018-03-28 15:55:00 IST
நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி கிரகலட்சுமி வீட்டில் 170 பவுன் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி கிரக லட்சுமி தி.நகர் தெற்கு போக் ரோட்டில் வசித்து வருகிறார்.

அவரது வீட்டில் நேற்று இரவு ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் நுழைந்தனர். அவர்கள் கிரகலட்சுமியின் அறையில் துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். 170 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.

இதுபற்றி மாம்பலம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.#tamilnews

Similar News