செய்திகள்

காஞ்சீபுரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது

Published On 2018-03-22 12:19 IST   |   Update On 2018-03-22 12:19:00 IST
காஞ்சீபுரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் செட்டித்தெரு பகுதியில் சின்னகாஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் முரளி ஆகியோர் வாகன தணிக்கை மேற் கொண்டனர்.

அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை மறித்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் சின்னகாஞ்சீபுரம் வரதராஜபுரம் தெருவை சேர்ந்த மோகன், காஞ்சீபுரம் திருக்காலிமேடு என்.எஸ்.கே.நகரை சேர்ந்த தாமோதரன், காஞ்சீபுரம் திருக்காலிமேடு பகுதியை சேர்ந்த கணபதி, அருந்ததி தெருவை சேர்ந்த தினேஷ் என்பது தெரிந்தது.

4 பேரும் காஞ்சீபுரத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்தல், மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள், 2 செல்போன்கள் போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News