செய்திகள்

ஜெயலலிதா படம் வேண்டாம் என்றால் அது தேர்தலில் எதிரொலிக்கும் - ஐகோர்ட் கருத்து

Published On 2018-02-26 10:38 GMT   |   Update On 2018-02-26 10:38 GMT
சட்டசபையில் ஜெயலலிதா படம் வேண்டாம் என மக்கள் நினைத்தால் அது வரும் தேர்தலில் எதிரொலிக்கும் என தி.மு.க தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆளுயர படம் சட்டசபையில் திறந்து வைக்கப்பட்டது. இதை அகற்றக்கோரி தி.மு.க சார்பில் ஜெ.அன்பழகன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், “ஜெயலலிதா படம் தேவையில்லை என மக்கள் நினைத்தால், அது வரும் தேர்தலில் எதிரொலிக்கும்” என தலைமை நீதிபதி இந்திரா பாணர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

சபாநாயகரின் முடிவில் தலையிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. எனினும், சபாநாயகரின் உத்தரவு தனிமனித உரிமைகளை பாதிக்கும் என்றால் நீதிமன்றம் தலையிடும் எனவும் தலைமை நீதிபதி கூறினார். தேர்தலுக்கு பின்னர் வரும் புதிய சபாநாயகர் ஜெயலலிதா படத்தை அகற்றுவது குறித்து முடிவெடுப்பார் என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை, அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படங்களை அகற்றக்கோரிய மனுக்களின் விசாரணை மார்ச் 2-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. #Jayalalitha #TamilNews
Tags:    

Similar News