செய்திகள்
முதியோர் மர்ம மரணங்கள் குறித்து அதிகாரிகள் விளக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
உத்திரமேரூர் கருணை இல்லத்தில் இறந்த முதியோர் மர்ம மரணங்கள் குறித்து அதிகாரிகள் விளக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் முதியோர்கள் மரணம் மற்றும் உடல் அடக்கம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
பாலேஸ்வரம் பகுதி மலையடிவாரத்தில் கடந்த 2006-ம் ஆண்டு அனாதை இல்லம் என்ற பெயரில் ஆதவரற்ற முதியோர்களுக்காக இந்த இல்லம் தொடங்கப்பட்டது. இங்கு இருப்பவர்களை வெளியே அனுப்பவதில்லை,
அன்பு இல்லம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த இல்லத்தின் அருகிலேயே உயிர் நீப்போர் காப்பகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் முதியோர் இல்லங்கள் செயல்பட்டு வரும் நிலையில் அந்த இடங்களில் பணம் செலுத்தினால் மட்டுமே முதியவர்களுக்கு பராமரிப்பு அளிக்கப்படுகின்றது,
ஆனால் இந்த இல்லத்தில் 200-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவ உதவி, உணவு, தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படுவது சேவை மனப்பான்மையிலா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்று அதிகாரிகள் விசாரிக்க வேண்டும்.
இங்கு தங்கி இருப்பவர்கள் விபரம் அரசுத் துறையினருக்கு தெரியுமா? அங்குள்ளவர்கள் பற்றிய விபரங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் உள்ளதா? என்பதை அதிகாரிகள் விளக்க வேண்டும். வெளிநாட்டுப் பணம் மூலம் இந்த முதியோர் கருணை இல்லம் நடத்தப்படுவதாக தெரிகிறது. இங்கு மரணம் அடைபவர்களின் எலும்புகள் உடல் உறுப்புகள் கடத்தப்படுகிறதா என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதுபோன்ற விடை தெரியாத கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் விடை அளிக்க வேண்டும்.
சாதாரணமாக பொது இடத்தில் அனாதையாக இறப்பவர்கள் குறித்து அவர் யார்? என்று காவல் துறையினரின் பல்வேறு விசாரணைக்குப் பிறகுதான் அந்த உடல் அடக்கம் செய்யப்படும்.
ஆனால் அதிக அளவில் இந்தக் கருணை இல்லத்தில் இறப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் அரசு அதிகாரிகள் இதுகுறித்து இதுவரை மேற்கொண்ட விசாரணையின் விபரங்கள் வெளியிடப்படாததும், நடவடிக்கை எடுக்காததும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி மாவட்ட கலெக்டர் உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். #tamilnews