செய்திகள்

நீலாங்கரை அருகே பெண் மீது ஆசிட் வீச்சு: டிரைவர் கைது

Published On 2018-02-21 14:56 IST   |   Update On 2018-02-21 14:56:00 IST
நீலாங்கரையை அடுத்த கானத்தூரில் ஆசைக்கு இணங்க மறுத்த பெண் மீது ஆசிட் வீசிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
திருவான்மியூர்:

நீலாங்கரையை அடுத்த கானத்தூர் காந்தி தெருவைச் சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மனைவி ரெஜிதா (40). இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ரெஜிதா குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் ரெஜிதா தனியாக இருப்பதை அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (40) டிரைவர். தனது வலையில் வீழ்த்த ஆசைப்பட்டார். அவரிடம் தாமாக சென்று பேச்சு கொடுத்தார். தன்னுடைய ஆசைக்கு இணங்க பல வழியில் இடையூறு கொடுத்ததாக கூறப்படுகிறது.

கடந்த வருடம் ரெஜிதாவுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக போலீசில் அவர் புகார் செய்தார். இதையடுத்து ரமேசை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

இதற்கிடையில் நேற்று இரவு ரெஜிதா வீட்டிற்குள் ரமேஷ் புகுந்து ஆசைக்கு இணங்க வற்புறுத்தினார். அவர் எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த ரமேஷ் ரெஜிதா மீது ஆசிட்டை வீசினார்.

இதில் அவரது முகம், கை, கால்கள் கருகின. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து திருவான்மியூர் போலீசார் விசாரணை நடத்தி ரமேசை கைது செய்தனர். #Tamilnews

Similar News