செய்திகள்
வேதாரண்யம் அருகே பக்கத்து வீட்டுக்காரரை தாக்கிய விவசாயி கைது
வேதாரண்யம் அருகே பக்கத்து வீட்டுக்காரரை தாக்கிய விவசாயியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம், அண்டகத்துறையை சேர்ந்தவர் தெய்வராசு (வயது 43). விவசாயி. இவரது மனைவி வேதநாயகி. தெய்வராசு தனது மனைவியை வேலைக்கு செல்லக் கூடாது என்று கூறியுள்ளார்.
ஆனால் அதை கேட்காமல் வேதநாயகி வேலைக்கு சென்றுள்ளார். இது தொடர்பாக தெய்வராசு மனைவியுடன் தகராறு செய்துள்ளார். கணவர் அடிக்க சென்றதால் வேதநாயகி அருகில் உள்ள உறவினர் அன்பழகன் என்பவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு சென்ற தெய்வராசு என் மனைவிக்கு உன் வீட்டில் எப்படி அடைக்கலம் கொடுக்கலாம் என்று தகராறு செய்து இரும்பு கம்பியால் அன்பழகனை அடித்துள்ளார்.
இதில் காயமடைந்த அன்பழகனை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். இது பற்றிய புகாரின் பேரில் கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்கு பதிவு செய்து தெய்வராசுவை கைது செய்தார்.