செய்திகள்
மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ்-2 மாணவன் பலி
மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ்-2 மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் கடும்பாடி. இவரது மகன் மனோஜ்குமார் (வயது 17). திருக்கழுக்குன்றத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தான்.
இவர் உடன் படிக்கும் நண்பர் அஜித்துடன் மாமல்லபுரத்தை அடுத்த பேரூர் கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது முன்னால் வந்த வேன் மீது திடீரென மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மனோஜ்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அஜித்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.