செய்திகள்
பழைய கந்தர்வக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
மாட்டுப்பொங்கலன்று மாடுகள் அவிழ்த்து விடப்பட்டதில் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மார்க். கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பழைய கந்தர்வகோட்டையில் மாட்டுப்பொங்கலன்று மாடுகள் அவிழ்த்து விடப்பட்டதில் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் ஒரு பகுதிக்குள் புகுந்து தாக்கினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கந்தர்வகோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தடையைமீறி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் ரத்தினவேல் தலைமை வகித்தார். சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் நாகை மாலி, மாநிலக்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர், சின்னதுரை, மாவட்டச் செயலாளர் கவிவர்மன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், ராமையன், சங்கர், உடையப்பன், பொன்னுசாமி, துரைச்சந்திரன், ஸ்ரீதர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ஜீவானந்தம், அன்புமணவாளன், கட்சியின் ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் அன்பழகன், தங்கவேல், லட்சாதிபதி, பீமராஜ், பாலசுந்தரமூர்த்தி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். #tamilnews