செய்திகள்

ஈரோடு மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினர் மறியல்-கைது

Published On 2018-01-29 17:24 IST   |   Update On 2018-01-29 17:24:00 IST
பஸ் கட்டண உயர்வை முழுமையாக திரும்ப பெற வலியுறுத்தி இன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் நடந்த மறியல் போராட்டத்தில் 2500-க்கும் மேற்பட்ட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு:

பஸ் கட்டண உயர்வை முழுமையாக திரும்ப பெற வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்அறிவித்து இருந்தார்.

அதன்படி இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க.வினரும், கூட்டணி கட்சியினரும் மறியல் போராட்டம் நடத்தினர். ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் உள்பட மாநகரில் 8 இடங்களிலும், ஒன்றிய பகுதிகளான பெருந்துறை, சென்னிமலை ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி உள்பட 7 இடங்கள் என 15 இடங்களிலும், ஈரோடு வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட கோபி, பவானி, அம்மாபேட்டை உள்பட 24 இடங்களிலும் என ஈரோடு மாவட்டம் முழுவதும் 39 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது.

இதில் தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளும்,தொண்டர்களும் கலந்து கொண்டனர். கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, விடுதலைசிறுத்தைகள் கட்சி, ம,தி.மு.க, முஸ்லிம் லிக், இந்திய கம்யூனிஸ்ட்டு உள்பட கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர்.

கோபியில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கோபி பஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடத்தினர். பஸ்களை வழி மறித்து அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட னர். போராட்டத்தில் தி.மு.க. நகர செயலாளர் நாகராஜன், முன்னாள் நூற்பாலை தலைவர் காளிப்பட்டி மணி, மருத்துவர் அணி டாக்டர் செந்தில்நாதன், மாவட்ட அவைத்தலைவர் பெருமாள்சாமி, ம.தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் கந்தசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வக்கீல் நந்தகுமார், தி.மு.க. பொறியாளர்அணி கமலக்கண்ணன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர் கள்கலந்து கொண்டனர். 100 பேர் கைது செய்யப் பட்டனர்.

அந்தியூர் பஸ் நிலையத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.வெங்கடாசலம்தலை மையில் மறியல் நடந்தது. இதில் மாவட்ட சிறுபான்மையினர் நலஉரிமை பிரிவு அமைப்பாளர் சோபியா சேக், பேரூர் கழக துணை செயலாளர் ஏ.சி.பழனிச் சாமி, அவைத்தலைவர் காளிமுத்து மாவட்ட சிறு பான்மை பிரிவுதுணை அமைப்பாளர் ஜெபஸ்டி யான்,முன்னாள் எம்.எல்.ஏ. குருசாமி,மாவட்ட வர்த்தகர் அணி அமைப் பாளர் மகாலிங்கம், பச்சாம் பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் முத்துநாதன், அத்தாணி பேரூர் கழக செயலாளர் செந்தில்கணேஷ், கெட்டி சமுத்திரம் ஊராட்சி கிளை செயலாளர் நாக ராஜசோழன், ஒன்றிய இளை ஞரணி அமைப்பாளர் வைத்தீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மொத்தம் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

அம்மாபேட்டையில் உள்ள மேட்டூர்-பவானி மெயின் ரோட்டில் அந்தியூர் பிரிவு சந்திப்பில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர்மறியலில்ஈடுபட்டனர். தி.மு.க. ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமை தாங்கி னார். முன்னாள் ஒன்றிய செயலாளர் என்.பி. சேகர், பேரூர் கழக செயலாளர் பெரியநாயகம், மாநில பொதுக்குழு உறுப்பினர் சம்பத்குமார், மாவட்ட துணை தலைவர் எம்.பி. அறிவானந்தம் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சத்தியமங்கலம் அருகே கள்ளிப்பட்டியில் தி.மு.க. வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் திரளான தி.மு.க.வினர் பங்கேற்றனர். கள்ளிப்பட்டியில் மாவட்ட விவசாய பிரிவு துணை அமைப்பாளர் மயில்சாமி தலைமையிலும், டி.ஜி.புதூரில் பேரூர் கழக செயலாளர் ரங்கசாமி தலைமையிலும், டி.என். பாளையத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சுப்பிரமணியம் தலைமையிலும் மறியல் நடந்தது. 3 இடங்களிலும் சேர்த்து 172 பேர் கைது செய்யப்பட்டனர்.

பவானி அந்தியூர் பிரிவு பகுதியில் தி.மு.க. நகர செயலாளர் ப.சீ.நாராஜன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.


இதில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு சாலை அமர்ந்து மறியல் செய்தனர். இதில் கலந்து கொண்ட 70-க்கும் மேற்பட்ட வர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதே போல பவானி மேட்டூர் ரோடு குருப்ப நாயக்கன்பாளையத்தில் மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் கே.ஏ.சேகர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

இந்த சாலை மறியல் போராட்டத்தில் காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டு சாலை அமர்ந்து பஸ் கட்டண உயர்வை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

கோபி அருகே கொளப்ப லூரில் கோபி ஒன்றிய செயலாளர் முருகன் தலைமையில் சாலை மறியல் நடந்தது. 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

நம்பியூர் பஸ் நிலையம் முன்பு தி.மு.க.வினர் ஒன்றிய செயலாளர் சென்னிமலை தலைமையில மறியல் நடத்தினர். 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

கவுந்தப்பாடி நால்ரோட் டில் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமையில் மறியல் நடந்தது. சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் ராஜா, ஒன்றிய செயலாளர் துரை, மாணவர் அணி செயலாளர் சிவபாலன், கம்யூனிஸ்டு கட்சி அய்யாவு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்களை கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி கைது செய்தார்.

ஆப்பக்கூடல் நால் ரோட்டில் தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். 5 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 59 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொடுமுடி புதிய பஸ் நிலையம் முன்பாக பஸ் கட்டண உயர்வினை கண்டித்து திமுக கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்ட னர். கொடுமுடி திமுக.ஒன்றிய கழக செயலாளர் சின்னக்குட்டி தலைமையில் நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிசாமி, திமுகவை சேர்ந்த இளஞ்செழியன், மதிமுகவை சேர்ந்த குழந்தைவேலு, திமுக மகளிரணியை சேர்ந்த மகளிரணி நிர்வாகி சுப்புலட்சுமி இளங்கோ உள்பட 135 பேரை போலீசார் கைது செய்தனர்.

புஞ்சைபுளியம்பட்டி பஸ் நிலையம் முன்பு தி.மு. க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தி.மு.க. நகர செயலாளர் சிதம்பரம் தலைமை தாங்கினார்.

முன்னாள் நகராட்சி தலைவர் அன்பு, முன்னாள் பவானிசாகர் ஒன்றியத்தலைவர் விசுவநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ராமசந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராஜேந்திரன், சி.பி.ஐ. எம்.ஜெகநாதன் உள் ளிட்ட 100-க்கும் மேற்பட்டேர் கலந்து கொண்டனர். சாலை மறியலில்ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடுமாவட்டம் முழுவதும் நடந்த மறியல் போராட்டத்தில் 2500-க்கும் மேற்பட்ட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.  #tamilnews

Similar News