செய்திகள்
கப்பலூரில் ரெயில் முன் பாய்ந்து தொழிலதிபர் தற்கொலை
கப்பலூரில் ரெயில் முன் பாய்ந்து தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக இந்த முடிவை எடுத்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை:
கோவை கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் குமரகுரு (வயது 36). இவர் மதுரையில் திருமணம் செய்துள்ளார். 2 குழந்தைகள் உள்ளனர்.
2 தினங்களுக்கு முன்பு குமரகுரு மதுரை வந்தார். இன்று காரில் கப்பலூர் சென்ற அவர், அங்குள்ள ரெயில்வே கேட் அருகே காரை நிறுத்தினார்.
பின்னர் அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து குமரகுரு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எதற்காக இந்த முடிவை எடுத்தார்? என்பது தெரியவில்லை. இது குறித்து மதுரை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய சீலன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரகுருவின் உடலை கைப் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பலியான குமரகுரு கோவையில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்தார். #tamilnews