செய்திகள்

திருவள்ளூரில் 4 அரசு பஸ்கள் கண்ணாடி உடைப்பு

Published On 2018-01-29 06:44 GMT   |   Update On 2018-01-29 06:44 GMT
4 அரசு பஸ்கள் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர்:

பஸ்கட்டண உயர்வை கண்டித்து திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூரில் இருந்து திருத்தணிக்கு இன்று காலை அரசுபஸ் (எண்.777) புறப்பட்டது. மீரா தியேட்டர் அருகே வந்தபோது வாலிபர்கள் சிலர் பஸ் மீது கல்வீசி தாக்கினர்.

இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்தது. அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறியடித்து கீழே இறங்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் திருவள்ளூர் டெப்போ அருகில் செங்கல்பட்டில் இருந்து வந்த அரசுபஸ் (88சி), சென்றான் பாளையம் அருகே ராமஞ்சேரி சென்ற அரசுபஸ் (டி52) புதூர் அருகே திருத்தணி நோக்கி சென்ற அரசு பஸ்சையும் மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்தன.

அடுத்தடுத்து 4 அரசு பஸ்கள் உடைக்கப்பட்ட சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News