செய்திகள்

அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்து அட்டை தயாரிக்கும் போட்டி

Published On 2018-01-20 16:51 GMT   |   Update On 2018-01-20 16:51 GMT
அன்னவாசல் அருகே உருவம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்து அட்டை தயாரிக்கும் போட்டி நடைபெற்றது.
நார்த்தாமலை:

அன்னவாசல் அருகே உருவம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்து அட்டை தயாரிக்கும் போட்டி நடைபெற்றது. போட்டியில் பள்ளியில் படிக்கும் 54 மாணவர்களும் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவரும் இருபுறமும் செங்கரும்புகள் நிற்க நடுவிலே பொங்கல் பானையுடன் மாடுகள் இருக்கும் வாழ்த்து அட்டையை தயாரித்தனர். 

இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி கூறுகையில், ‘இது போன்ற போட்டியில் மாணவ, மாணவிகள் கலந்து கொள்வதன் மூலம் தங்களது படைப்பாற்றல் திறனை வளர்த்து கொள்ள முடிகிறது. மேலும் குழந்தைகளின் சிந்தனைக்கும், கருத்துக்கும் முழு சுதந்திரம் அளிப்பதால் அவர்களின் படைப்பாற்றல் திறன் தானாகவே வளர்கிறது. யாருக்கெல்லாம் வாழ்த்து அட்டை அனுப்புவது, எதற்கெல்லாம் வாழ்த்து அட்டை அனுப்ப வேண்டும் என்ற விவரத்தையும் தெரிந்து கொள்கின்றனர்’ என்றார். #tamilnews
Tags:    

Similar News