செய்திகள்

ஹஜ் பயண மானியம் ரத்து: ராமநாதபுரம், சிவகங்கையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

Published On 2018-01-19 13:13 GMT   |   Update On 2018-01-19 13:13 GMT
ஹஜ் பயணம் மேற் கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் அரசு வழங்கிய மானியத்தை ரத்து செய்ததை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம்:

ஹஜ் பயணம் மேற் கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் அரசு வழங்கிய மானியத்தை ரத்து செய்ததை கண்டித்து மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நகர் தலைவர் கோபி வரவேற்றார்.

முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சரவணகாந்தி ராஜசேகர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வேலுச்சாமி, மாவட்ட பொருளாளர் பாரிராஜன், சிறுபான்மை பிரிவு நிஜாம்அலிகான், துல்கீப், ஹாஜா, முன்னாள் மாவட்ட தலைவர் விக்டர், சிறப்பு அழைப்பாளர்கள் முத்துராமலிங்கம், ரமேஷ் பாபு, மாவட்ட துணைத் தலைவர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்பிரிவு அன்புச் செழியன், இலக்கிய அணி தலைவர் முருகேசன், செய்தி தொடர்பாளர் கவுசிமகாலிங்கம் மற்றும் வட்டாரத் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சிவகங்கையில் காங்கிரஸ் மாவட்ட சிறு பான்மை பிரிவின் சார்பில் மாவட்டத்தலைவர் சையது இபுராகிம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம் பாட்சா பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ சேகரன், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, விவசாய பிரிவு தலைவர் அரசு, நகர்தலைவர் பிரபாகரன், மகளிரணி வித்யா, நிர்வாகிகள் அல்அமின், கணேசன் உள்பட பலர் பேசினர்.

வாடிப்பட்டி, தாதம்பட்டி மந்தையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத்தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்டசெயலாளர்கள் குரு, ராஜா முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

இதில் கொடிமுத்து, மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். சோழவந்தான் நகரதலைவர் கனகராஜ் நன்றி கூறினார். #tamilnews

Tags:    

Similar News