செய்திகள்

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறன் மாணவிக்கு காலில் அறுவை சிகிச்சை

Published On 2018-01-15 17:05 IST   |   Update On 2018-01-15 17:05:00 IST
பொன்னமராவதி உதவி தொடக்க கல்வி அலுவலர், பரிந்துரையின் கீழ், மாற்றுத்திறன் மாணவிக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
பொன்னமராவதி:

பொன்னமராவதி அருகே திருக்களம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் மாணவி கார்த்திகா, மாற்றுத்திறனாளி. மாணவிக்கான சிறப்பாசிரியர்கள் மூலம் கல்வி பயின்று வருகிறார்.

மேலும் நடக்கும் பயிற்சியளிப்பதற்காக உடலியக்க நிபுணர் தங்கவேல், மாணவிக்கு நடை பயிற்சி வழங்கி வந்தார். இம்மாணவிக்கு 2017- 2018ம் கல்வியாண்டின் கீழ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.

பொன்னமராவதி உதவி தொடக்க கல்வி அலுவலர், வட்டார வளமைய கல்வி ஒருங்கிணைப்பாளர் புவனேஷ்வரி ஆகியோரின் பரிந்துரையின் கீழ், மாணவி புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சை செய்து கொண்ட மாணவியை புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் வீரப்பன் ஆகியோர் நலம் விசாரித்தினர். மேலும் வட்டார வளமயம் மூலம் வழங்கப்படும் உடல் இயக்க பயிற்சிக்கு அனுப்பி மாணவியின் பெற்றோருக்கு அறிவுரை வழங்கினர். #tamilnews

Similar News