செய்திகள்

ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் கேரட் விலை உயர்வு

Published On 2018-01-15 14:47 IST   |   Update On 2018-01-15 14:47:00 IST
ஊட்டியில் இருந்து கேரட் விற்பனைக்கு வராததால் ஈரோடு மார்க்கெட்டில் கேரட் விலை அதிக விலைக்கு விற்கப்பட்டது.

ஈரோடு:

ஈரோடு நேதாஜி மார்க்கெட்டிற்கு தாளவாடி, ஊட்டி, மேட்டுப்பாளையம், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. நேற்று முன்தினம் காய்கறிகள் வரத்து அதிகளவில் இருந்தது. எனவே அதன் விலையும் குறைந்து காணப்பட்டது.

மார்க்கெட்டில் கத்திரிக்காய் கிலோ ரூ.20-க்கும், தக்காளி கிலோ ரூ.10-க்கும், உருளைக்கிழங்கு கிலோ ரூ.20-க்கும், மிளகாய் கிலோ ரூ.20-க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.50- க்கும், பெரிய வெங்காயம் கிலோ .50-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.20-க்கும், புடலங்காய் கிலோ ரூ.20-க்கும் சேனக்கிழங்கு கிலோ ரூ.30-க்கும், பாகற்காய் கிலோ ரூ.20-க்கும் விற்பனையானது. நேற்றும் இதே விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது. எனவே பொதுமக்கள் பொங்கலையொட்டி அதிகளவில் காய்கறிகளை வாங்கி சென்றனர். ஆனால் நேற்று கேரட் விலை மட்டும் உயர்ந்து காணப்பட்டது.

நேற்று முன்தினம் ரூ.50-க்கு விற்பனையானது. நேற்று மார்க்கெட்டில் உள்ள கடைகளை பொறுத்து ரூ.10 முதல் ரூ.30 வரை விலை உயர்த்தி கேரட் விற்பனை செய்யப்பட்டது.

கேரட் விலை உயர்வு குறித்து நேதாஜி மார்க் கெட்டில் ஒருவரிடம் கேட்ட போது, ஊட்டி மார்க்கெட்டுக்கு நேற்று விடுமுறை நாளாகும். எனவே அங்கிருந்து ஈரோட்டிற்கு வர வேண்டிய கேரட் விற்பனைக்கு வர வில்லை.

இதனால் மற்ற இடங்களிலிருந்து வந்த கேரட் மட்டும் விற்பனைக்கு இருந்தது. இதுவே விலை உயர்வுக்கு காரணமாகி விட்டது. நேற்று பொங்கலை யொட்டி மார்க்கெட்டில் அதிகளவில் மக்கள் கூட்டம் இல்லை. இன்னும் ஒரு வாரத்திற்கு வெறிச்சோடி தான் காணப்படும் என்றார். #tamilnews

Similar News