செய்திகள்

திருட்டு வழக்கில் சந்தேகம்: போலீஸ் விசாரணையில் பெண் உயிரிழப்பு

Published On 2018-01-15 14:05 IST   |   Update On 2018-01-15 14:05:00 IST
திருட்டு வழக்கில் போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண் இறந்த சம்பவம் கல்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாமல்லபுரம்:

கல்பாக்கம், அணுமின் நிலைய குடியிருப்பில் வசித்து வருபவர் ரமேஷ்குமார். இவரது வீட்டில் கடந்த 6-ந்தேதி 10 பவுன் நகை மாயமானது.

இது தொடர்பாக வீட்டில் வேலை பார்த்த அதே பகுதியை சேர்ந்த கன்னியம்மாள் (வயது 47). மீது சந்தேகம் இருப்பதாக கல்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து கன்னியம்மாளை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதில் கன்னியம்மாள் இறந்து போனார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

விசாரணையின் போது போலீசார் தாக்கியதில் கன்னியம்மாள் இறந்து போனதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் விசாரணையில் பெண் இறந்த சம்பவம் கல்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.#tamilnews

Similar News