செய்திகள்

ஈரோட்டில் காய்கறிகள் விலை சரிந்தது: பூக்கள் விலை கடும் உயர்வு

Published On 2018-01-13 15:58 IST   |   Update On 2018-01-13 15:58:00 IST
ஈரோட்டில் வரத்து அதிகரிப்பு காரணமாக காய்கறி விலை குறைந்தது. பூக்கள் விலை அதிகரித்து உள்ளது.
ஈரோடு:

ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் இன்று கத்திரிக்காய் கிலோவுக்கு ரூ.20-க்கும், தக்காளி கிலோவுக்கு ரூ.10-க்கும், உருளை கிழங்கு கிலோவுக்கு ரூ.20-க்கும், மிளகாய் கிலோவுக்கு ரூ.20-க்கும், கேரட் கிலோவுக்கு ரூ.50-க்கும், சின்ன வெங்காயம் கிலோவுக்கு ரூ.50-க்கும், பெரிய வெங்காயம் கிலோவுக்கு ரூ.50-க்கும், வெண்டக்காய் கிலோவுக்கு ரூ.20-க்கும், புடலங்காய் கிலோவுக்கு ரூ.20-க்கும் சேனக்கிழங்கு கிலோவுக்கு ரூ.30-க்கும், பாகற்காய் கிலோவுக்கு ரூ.20 க்கும் விற்பனையானது.

ஈரோடு நேதாஜி மார்க்கெட்டிற்கு தாளவரி, ஊட்டி, மேட்டுபாளையம், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வரும்.

மழை காரணமாக இந்த பகுதிகளில் காய்கறி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து அதிகரித்து விலை குறைந்துள்ளது.

இதனால் பொது மக்கள் பொங்கலை கொண்டாட காய்கறிகளை அதிக அளவில் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.

ஆனால் பூக்களின் விலை உயர்வு அவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோவுக்கு ரூ.1400-க்கும், முல்லை பூ கிலோவுக்கு ரூ.1000-க்கும், ஜாதி பூ கிலோவுக்கு ரூ.600-க்கும், காக்கட்டான் பூ கிலோவுக்கு ரூ.700-க்கும், சம்பங்கி பூ கிலோவுக்கு ரூ.120-க்கும், ரோஜா கிலோவுக்கு ரூ.120-க்கும், அரளி பூ கிலோவுக்கு ரூ.150-க்கும் விற்பனையானது. #TamilNews

Similar News